வேண்டும் நீ பாரதி!
(கவியரசர் கண்ணதாசன் விழாவில் (Dallas ,Texas , USA ) இரண்டாம் பரிசு பெற்ற கவிதை)
மீண்டும் ஒருமுறை எங்களுக்கு
வேண்டும் நீ பாரதி!
சாதிகள் இல்லையென்று சரியான
பாடம் சொன்னாய்!
பள்ளிகள் கூட இன்று
பாடம் சொன்னாய்!
பள்ளிகள் கூட இன்று
பதியம் போடுகிறது சாதியை!
"யாமறிந்த மொழிகளிலே" என
உயர்த்திக் காட்டினாய் அன்று!
யாருக்கும் தெரியாமல் தமிழ்
அடமானத்தில் இன்று!
எட்டுத்திக்கும் சென்று
எடுத்து வரச் சொன்னாய் செல்வங்களை!
எடுக்கச் சென்றவரெல்லாம்
அங்கங்கே தங்கி விட்டார் செல்வத்தோடு!
"பாருக்குள்ளே நல்ல நாடு"
பாட்டில் சொன்னாய் நீ!
பார்க்கும் இடமெல்லாம் "பார்"
பரவசப் படுகிறோம் நாங்கள்!
தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்
ஜகத்தினை அழிக்கச் சொன்னாய்!
அடுத்தவேளை உணவுக்காக
தவி தவிப்பாய் மக்கள் கூட்டம்!
காக்கைச் சிறகில்கூட காட்சி தந்தார்
கண்ணன் உனக்கு!
காகமாய்க் கத்தினாலும்
நீர் தர மறுக்கிறார்
கிருஷ்ணர் எமக்கு!
வெள்ளை அரக்கனை வெளியேற்ற
வெகுண் டெழுந்தாய்!
நீ பிறந்த நெல்லை கூட
சாதி அரக்கனிடம் சிக்குண்டழிகிறது!
நிர்க்கதியாய் நிற்கும் எங்கள்
நிலை போக்க!
நீ வேண்டும் பாரதி!
- அன்புடன் மு.ஜெயக்குமார்.
அயல் மண்ணிலும், தமிழ்
பதிலளிநீக்குவயல் உழுது
மொழி விளைக்கும்
உங்களைப் போன்ற பாவலர்கள்தாம் தமிழுக்குவேண்டும்..
-வெ .சீ .ராஜூ.
பாரதியார் பற்றிய கவிதை மிகவும் நன்றாக உள்ளது கருத்து செறிவு உடையதாக உள்ளது, உணர்ச்சி நிறைந்திருந்தது.
பதிலளிநீக்குபேராசிரியர் சுமதி.