ஒரு வேண்டுகோள்!


ஒரு வேண்டுகோள்!

(நிலாச்சாரல் http://www.nilacharal.com/  இணையப் பக்கத்தில் வெளியான கவிதை)



என்னைக் கிள்ளிப் பார்த்தேன்
வலித்தது!

கனவில் இல்லையென்று
கணநேரத்தில் புரிந்தது!

வேறு தேசமோ என்ற வினாவிற்கும்
விடை கிடைத்தது!

வெறும் காற்று வந்த குழாய்களில்
வெள்ளமாய் நீர்!

கம்யூனிஸ்ட் சட்டை அணிந்த சாலைகள்
கருஞ் சட்டைக்கு மாறின!

மின்மினி போல் ஒளி உமிழ்ந்த
தெரு விளக்குகள்
இரவுகளைப் பகலாக்கின!

திருவிழா நாட்களில்
விருந்தாளியாய் வந்த பேருந்துகள்
தினம்தோறும் தேடி வந்தன!

அள்ள அள்ளக் குறையாத
அமுதசுரபிகளாயின
இல்லையென்றே சொல்லிவந்த
நியாயவிலைக் கடைகள்!

தலைநகர் சென்று தவமிருந்தாலும்
தலை காட்டாத அமைச்சர்கள்
தலைக்கு மேல் கைகூப்பி
தரிசனம் தந்தனர்!

ஆமாம்!
எங்களூரில் இடைத் தேர்தல்!

வெற்றி பெரும் வேட்பாளரே
ஒரு வேண்டுகோள்!
மறவாமல் உங்கள் வாக்குறுதியை
நிறைவேற்றுங்கள் !

மறந்துவிட்டால் பரவாயில்லை!
இன்னொரு தேர்தலுக்கு
வழி செய்யுங்கள்!

இறந்தல்ல
பதவியைத் துறந்து!

1 கருத்து:

  1. 'ஒரு வேண்டுகோள்' கவிதை யதார்த்தமான உண்மை யை வெளிபடுத்துகிறது .

    பேராசிரியர் சுமதி

    பதிலளிநீக்கு