தாயுமானவன்!



தாயுமானவன்!


ஆமாம் அன்பே!

"அதில் குற்றம்!" இதில் குற்றம்!"
என
உன் குறைகளைச்
சுட்டுவதால்

மாமியார்
இல்லாத குறையையும்
நீக்கி விட்டேன்!

உனக்கு
நான் மாமியார் ஆனதால்
எனக்கு
நானே
தாயாகி விட்டேன்!
 

1 கருத்து:


  1. மகனின் மகத்துவமே! மனிதத்தின் பேரமுதே!
    தாயாக வாழ்ந்திருந்து வழியில் நீ தொலைந்தாலும்
    ஓயாமல் உனையெண்ணி உள்மனதின் ஏக்கத்திலே
    தேயாத நினைவுகளால் காயத்துக்கு மருந்தளித்து
    நீயாக உந்தனையே தாயாக உருவகித்தாய்! உணர்ந்துவிட்டாய்!

    பதிலளிநீக்கு